லண்டனில் இடம்பெறும் போராட்டங்களில் மாணவர்கள் கலந்துகொள்ளக் கூடாது – பிரித்தானிய பிரதமர்!

பிரித்தானியாவில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இன்று நடைபெறும் போராட்டங்களில் மாணவர்கள் யாரும் கலந்துகொள்ள வேண்டும் என அந்நாட்டின் பிரதமர் கெய்ர் ஸ்டாமர் (Keir Starmer) வலியுறுத்தியுள்ளார்.
மான்செஸ்டர் (Manchester) தாக்குதல்களை தொடர்ந்து தற்போது யூத எதிர்ப்பு தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும், யூத சமூகங்களைப் பாதுகாக்க அரசாங்கம் அதிகளவில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் பாலஸ்தீனத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட நினைவு நாளான இன்று லண்டனைச் சேர்ந்த மாணவர்கள் கூட்டு அணிவகுப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். அதேநேரத்தில் மான்செஸ்டர் (Manchester), கிளாஸ்கோ (Glasgow), எடின்பர்க் (Edinburgh), பிரிஸ்டர் (Bristol) மற்றும் ஷெஃபீல்ட் (Sheffield) ஆகிய இடங்களிலும் போராட்டங்கள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசாவில் நடைபெற்று வரும் போருக்கு எதிராகவும் பாலஸ்தீனயர்களுக்கு ஆதரவாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும் இதனை ஒரு காரணமாக பயன்படுத்திக் கொண்ட பலர் பிரித்தானியாவில் யூத சமூகங்கள் மீது தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றனர். இது சமூகத்தின் பாதுகாப்பு ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கிறது. அத்துடன் அவ்வாறான தாக்குதல்களை மேற்கொள்பவர்கள் அதற்கான பொறுப்பையும் ஏற்பதில்லை என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யூத சமூகங்களுக்கு தீங்கு விளைவிக்க முயல்பவர்களுக்கு எதிராக இங்கிலாந்து எப்போதும் நடவடிக்கை எடுக்கும் எனவும். இவ்வாறான செயற்பாடுகள் பிரித்தானிய சட்டத்திற்கு முரணானது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மான்செஸ்டரில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியின் பாதுகாப்பிற்காக அதிக நிதியை அரசாங்கம் ஒதுக்க வேண்டும் எனவும், இது தொடர்பில் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
காசா தாக்குதல் திறப்புக் காட்சிகள்
2023 அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் தலைமையிலான போராளிகள் குழு நடத்திய தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேலிய இராணுவம் காசாவில் தாக்குதலை மேற்கொண்டது. இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.
அப்போதிருந்து, காசாவில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளால் 67,139 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.