தமிழ்நாடு

அரசு பள்ளியில் மயங்கி விழுந்து மாணவி உயிரிழப்பு..! வீடியோ வெளியிட்ட சகோதரன்

தமிழக மாவட்டம், திருவண்ணாமலையில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அருகே உள்ள ராந்தம் கிராமம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் அஞ்சலை (15) மங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில், நேற்று இந்த பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், அவர் வருவதற்கு தாமதம் ஆனதால் பள்ளி மாணவர்கள் சுமார் 3 மணி நேரமாக வெயிலில் நின்றதாக கூறப்படுகிறது.இதனால், நீண்ட நேரம் வெயிலில் நின்ற 10 வகுப்பு மாணவி அஞ்சலை மயங்கி விழுந்தார்.இதனால், பள்ளியின் ஆசிரியர்கள் மாணவி அஞ்சலையை மீட்டு மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும், மாணவியின் நிலை குறித்து பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தினர்.

அங்கு, மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரை உடனடியாக மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அஞ்சலை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் இறப்புக்கான காரணம் குறித்த முழு தகவலும் பிரேத பரிசோதனையின் முடிவுக்கு பின்னரே தெரியவரும்.

இந்நிலையில், மாணவி அஞ்சலையின் சகோதரர் வெளியிட்ட வீடியோவில், “என் தங்கை அஞ்சலைக்கு எந்தவித உடல்நல பிரச்சனையும் இல்லை என்றும் வெயிலில் நிற்க வைத்ததாலேயே அவர் உயிரிழந்துவிட்டார் எனவும்” கூறியுள்ளார்.மேலும், என் சகோதரியின் இறப்புக்கான நியாயம் வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

https://twitter.com/i/status/1698923116448428241

Mithu

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்
error: Content is protected !!