ஆஸ்திரேலியாவில் பதிவான வலுவான நிலநடுக்கம்

தெற்கு ஆஸ்திரேலியாவின் பிளிண்டர்ஸ் மலைத்தொடரில் அமைந்துள்ள ஹாக்கர் நகரில் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவான வலுவான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் ஆஸ்திரேலிய நேரப்படி இன்று பிற்பகல் 1.22 மணியளவில் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
பிளிண்டர்ஸ் மலைத்தொடரில் உள்ள ஹாக்கர் நகர மக்கள் சுமார் 120 பேர் நிலநடுக்கத்தை உணர்ந்ததாகக் கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவானது, ஆனால் பின்னர் அது 4.5 ஆக பதிவானதாக அறிவிக்கப்பட்டது.
சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக சமூக ஊடகங்களில் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் இதுவரை யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
(Visited 19 times, 1 visits today)