ஐரோப்பா

ஜெர்மனியில் கடுமையாகும் சட்டம் – வாகன ஓட்டுநர்களுக்கு கடும் நடவடிக்கை

ஜெர்மனியில், வாகனம் மற்றும் சைக்கிள் ஓட்டும் போது கையடக்க தொலைபேசிகள், டெப், மடிக்கணினிகள் போன்ற சாதனங்களை பயன்படுத்தும் ஓட்டுநர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கட்டுப்பாட்டு நடவடிக்கை எனப்படும் வாரத்தையை ஜெர்மன் காவல்துறையினர் தொடங்கியுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது, விதிகளை மீறும் நபர்களுக்கு 100 யூரோ அபராதம் விதிக்கப்படும்.

காவல்துறையின் தகவலுக்கமைய, ஓட்டுநர்கள் வாகனம் ஓட்டும் போது ஒருசில விநாடிகள் கையடக்க தொலைபேசி திரையில் கவனம் செலுத்தினாலும், அது சுமார் 14 மீட்டர் தூரம் கண்மூடித்தனமாக பயணத்தை தூண்டும்.

இது பாரிய விபத்துகளுக்கு நேரடியான காரணமாகும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

2024ஆம் ஆண்டில் மட்டும் சாக்சனி-அன்ஹால்ட் ( Saxony-Anhalt) பகுதியில் 120 பேர் சாதனங்களைப் பயன்படுத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதே ஆண்டில், 164 விபத்துகள் கவனச்சிதறலால் ஏற்பட்டுள்ளன. 2024ஆம் ஆண்டு 2,780 பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இந்த நடவடிக்கை ஐரோப்பிய அளவில் மேற்கொள்ளப்படும் வீதி பாதுகாப்பு முயற்சியின் ஒரு பகுதியாகும்.

“வீதியில் கவனம் செலுத்துங்கள்” என்ற பிரச்சாரத்தையும் காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்