வலுப்பெறும் காற்றழுத்தம் : மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு!
வளிமண்டலவியல் திணைக்களத்தில், இயற்கை அனர்த்தங்களுக்கான ஆரம்ப எச்சரிக்கை மையம் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த அறிவிப்பு நாளை (23.10) பிற்பகல் 02.30 மணி வரை செல்லுபடியாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு மற்றும் அதனை அண்டிய மேற்கு வளைகுடாவில் நீண்டகாலமாக பயணங்களை மேற்கொள்ளும் மீன்பிடி படகுகள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய-மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி அடுத்த 24 மணி நேரத்தில் வங்கதேச கடற்கரை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்போது காற்றாது 40-45 கி.மீ வேகத்தில் வீசுவதுடன், சில நேரங்களில் 50-60 கி.மீற்றர் வேகத்திலும் வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது.
அத்துடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆகவே நீண்டகால கடற்பயணங்களை மேற்கொள்ளும் மீனவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.