பொழுதுபோக்கு

STR 49 படத்துக்காக மீண்டும் இணையும் வில்லங்கமான கூட்டணி

தமிழ் சினிமாவில் வலம் வரும் மாஸ் நடிகர்களில் ஒருவரான சிம்பு, தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். அவர் நடிப்பில் தற்போது தக் லைஃப் திரைப்படம் உருவாகி வருகிறது.

தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு இப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர சிம்பு கைவசம் எஸ்.டி.ஆர்.48 திரைப்படமும் உள்ளது. இப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார்.

எஸ்.டி.ஆர் 48 படத்துக்கு முன்னதாகவே எஸ்.டி.ஆர் 49 படத்தில் நடிக்க உள்ளார் சிம்பு. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளிவந்தது.

இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ஓ மை கடவுளே என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை இயக்கியவர் ஆவார். அஸ்வத் மாரிமுத்து – சிம்பு கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தை விஜய்யின் கோட் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

மேலும் எஸ்.டி.ஆர் 49 படத்தில் விண்டேஜ் சிம்புவை பார்க்கலாம் என்றும் கூறி உள்ளதால் இப்படம் சிம்பு ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும் என கூறப்படுகிறது.

See also  ரம்யா பாண்டியனுக்கு விரைவில் டும்.. டும்.. டும்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

விண்டேஜ் சிம்புவுக்கு பல வெற்றிப்பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர் என்றால் அது யுவன் சங்கர் ராஜா தான். ஆனால் எஸ்.டி.ஆர் 49 படத்துக்கு முதன்முறையாக அனிருத் உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக பேச்சு அடிபடுகிறது.

ஏற்கனவே இவர்கள் காம்போவில் வெளிவந்த பீப் சாங் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த வில்லங்க கூட்டணி மீண்டும் இணைவதால் என்ன சம்பவம் பண்ண போகிறார்களோ என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

(Visited 2 times, 2 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content