நடிகையை வீட்டுக்கு கூப்பிட்டு சிம்பு செஞ்ச விஷயம்..ஸ்பாட்டுக்கு வராத STR!
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/str-jai-copy.jpg)
சிம்புவும் சர்ச்சையும் ஒட்டி பிறந்த இரட்டை சகோதரிகள் என்று சொல்லலாம். சிம்புவை பற்றி கடந்து சில வருடங்களாகத்தான் சர்ச்சை எதுவும் இல்லாமல் இருக்கிறது.
சிம்பு காதலித்தாலும் சர்ச்சை தான், மைக் பிடித்து பேசினாலும் சர்ச்சை தான். அது மட்டும் இல்லாமல் இவர் ஜகஜால பிளேபாயாக ஒரு காலத்தில் இருந்தார் என்பதை பல மீடியாக்களும் உறுதிப்படுத்தி இருக்கின்றன.
தற்போதைக்கு எந்த விஷயத்திலும் சிக்காமல் பழைய விஷயங்களை ரசிகர்கள் மறக்கும் அளவிற்கு நடந்து வருகிறார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நடிகை ஒருவர் கடந்த கால பிளாஷ்பாக் ஒன்றை வெளியில் சொல்லி மீண்டும் கொளுத்தி போட்டு இருக்கிறார்.
நடிகர் ஜெய் நடித்த அவள் பெயர் தமிழரசி படத்தில் ஹீரோயின் ஆக நடித்தவர் தான் மனோ சித்ரா. இவருக்கு ஒரு முறை சிம்புவிடமிருந்து ஃபோன் கால் வந்திருக்கிறது.
ஒரு படத்தில் நடிப்பதற்காக பேச வீட்டிற்கு வரச் சொல்லி இருக்கிறார். மனோ சித்ராவும் வீட்டுக்கு சென்று இருக்கிறார்.
அப்போது திடீரென மனோ சித்ராவின் கையை பிடித்துக் கொண்டு என்ன உங்க கை இவ்வளவு குட்டியா இருக்கிறது என்று கேட்டாராம்.
அது மட்டும் இல்லாமல் நீங்க ரொம்ப குண்டா இருப்பீங்கன்னு எதிர்பார்த்தேன் என்றும் சொல்லி இருக்கிறார். அப்போது மனோ சித்ரா இல்ல இப்போதான் வெயிட் லாஸ் பண்ண ஸ்டார்ட் பண்ணி இருக்கேன் என்று சொன்னாராம்.
அதற்கு சிம்பு ஐயையோ அப்படியெல்லாம் உடம்பை குறைக்காதீங்க என்று சொன்னாராம்.
அதுமட்டுமில்லாமல் தன்னுடைய நண்பன் மகத்திடம் என்னடா செய்வது என சீரியஸாக டிஸ்கஷன் செய்திருக்கிறார்.
பின்னர் மனோ சித்ராவை ஏவிஎம் ஸ்டுடியோக்கு போக சொன்னாராம். அங்கு படப்பிடிப்புக்காக எல்லோரும் காத்திருக்கும் நேரத்தில் சிம்பு வரவே இல்லையாம்.
மனோ சித்ராவுக்கு போன் பண்ணி மன்னிச்சிடுங்க என்னால வர முடியாது இன்னொரு நல்ல வாய்ப்பின் போது ஒன்றாக சேர்ந்து நடிக்கலாம் என்று சொன்னாராம்.