அமெரிக்காவையும், ரஷ்யாவையும் இணைக்கும் சுரங்கப்பாதையை நிர்மாணிக்க நடவடிக்கை!
அமெரிக்காவையும் ரஷ்யாவையும் இணைக்கும் ஒரு சுரங்கப்பாதையை நிர்மாணிப்பதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருவதாக ஸ்கை நியூஸ் தெரிவித்துள்ளது.
06 மாதங்களுக்கு முன்பே இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாக ரஷ்யாவின் முதலீட்டு தூதர் கூறியுள்ளார்.
இந்த ரயில் சுரங்கப்பாதை பெரிங் ஜலசந்தியின் கீழ் இரு நாடுகளையும் இணைக்கக்கூடும் என்று கிரில் டிமிட்ரிவ் (Kirill Dmitriev) தெரிவித்துள்ளார்.
இது ரஷ்யாவின் (Russia) பரந்த மற்றும் குறைந்த மக்கள் தொகை கொண்ட சுகோட்கா பகுதியை அலாஸ்காவிலிருந்து (Alaska) பிரிக்கிறது.
இது தொடர்பில் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட டிமிட்ரிவ் (Dmitriev) “ரஷ்யா-அலாஸ்கா சுரங்கப்பாதைக்கான சாத்தியக்கூறு ஆய்வை நாங்கள் ஆறு மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டோம்” என்று கூறினார்.
பிரபல தொழிலதிபரான எலான் மஸ்கின் ( Elon Musk) போரிங் நிறுவனத்தால் (Boring Company) சுரங்கப்பாதையை நிர்மாணிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





