ஐரோப்பா

ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் – தொழிற்சங்கங்கள் கூட்டாக அழைப்பு!

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ( Keir Starmer) பதவி விலக வேண்டும் என்று தொழிற்சங்கத் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான மண்டேல்சனின் உறவு தொழிற்கட்சி அரசாங்கத்திற்கு  குறிப்பிடத்தக்க அழுத்தத்தை கொண்டுவந்துள்ளது.

மண்டேல்சனை அமெரிக்க தூதராக நியமிக்க ஆலோசனை வழங்கிய மோர்கன் மெக்ஸ்வீனி (Morgan McSweeney)  பதவி விலகியதை தொடர்ந்து தற்போது ஸ்டாமரும் பதவி விலக வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தீயணைப்பு துறையின் தொழிற்சங்க  சங்கத்தின் பொதுச் செயலாளர் ஸ்டீவ் ரைட் (Steve Wright), கெய்ர் ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

நாடு “மாற்றத்தைக் காண வேண்டும்” என்று கூறிய அவர், வாக்காளர்கள் எதிர்பார்த்தது “இன்னும் நடக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் தனது சொந்த அரசாங்கத்திற்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களிடமிருந்து ஆலோசனையைப் பெறவில்லை என்று தெரிகிறது … மோசமான முடிவுகளை எடுக்கும் ஒரு பிரிவுக் குழுவிடம் அவர் ஆலோசனை கோருகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை RMT போக்குவரத்து தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் எடி டெம்ப்சி, ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை எதிரொலித்து, அவர் தொழிலாள வர்க்க வாக்காளர்களை அந்நியப்படுத்துவதாகக் கூறினார்.

இவ்வாறாக தொழிற்சங்க தலைவர்கள் உள்ளிட்ட ஊழியர்களும்  ஸ்டார்மர்  பதவி விலக வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!