பொழுதுபோக்கு

‘ஸ்டார்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?

சினிமாவில், ஒரு நடிகராக தன்னை நிலை நிறுத்திக்கொள்வது என்பது எளிதான காரியம் அல்ல… இந்த வெற்றி முகத்திற்கு பின்னால் எப்படி பட்ட வேதனைகள் இருக்கும் என்பதையே ஒரு கான்செப்ட்டாக வைத்து உருவானது தான் ஸ்டார் திரைப்படம்.

சிறு வயதில் இருந்தே, தன்னுடைய மகனின் மனதில் நீ ஒரு நடிகராக வேண்டும் என்பதை சொல்லி சொல்லி வளர்க்கும் தந்தை. தந்தையின் ஆசையை நிறைவேற்ற படத்தில் நடிக்க வாய்ப்பு தேடும் கவின் , எப்படி பட்ட அவமானங்களை சந்திக்கிறார்.

கடைசியில் நடிகராக மாறினாரா.. தந்தையின் கனவை பூர்த்தி செய்தாரா? என்பதை காதல், சென்டிமென்ட் எமோஷன் என அணைத்தும் கலந்த கலவையாக கூறி இருந்தார் இளம் இயக்குனர் இளன்.

மே 10-ஆம் தேதி வெளியான இப்படம் ஒரே வாரத்தில் , சுமார் 15 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. இரண்டு வாரங்களை கடந்தும், தற்போது வரை சில திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கும் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, ஜூன் 14-ஆம் தேதி இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஓடிடி-யில் புதிய படங்களை பார்க்க தயாராக உள்ள பல ரசிகர்களை குஷியாகியுள்ளது. இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை மிகப்பெரிய பிளஸ்ஸாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

(Visited 7 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content