பொழுதுபோக்கு

ரஜினிக்கு பிறந்தநாள் பரிசு.. கவினின் ஸ்டார் பட சிங்கிள் ரிலீஸ் வெளியானது

இளன் இயக்கத்தில் கவின் நடித்திருக்கும் ஸ்டார் படத்தின் காலேஜ் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற சிங்கிள் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியிருக்கிறது.

கணேஷ் கே பாபு இயக்கத்தில் டாடா என்ற படத்தில் நடித்த கவினுக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியிருந்தது.

ஒரு கல்லூரி மாணவன் குழந்தைக்கு தந்தையாகும் சூழலை ஒன்லைனாக வைத்துக்கொண்டு படம் உருவாகியிருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான இப்படம் அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக கவினின் நடிப்பு வெகுவாக ரசிக்கப்பட்டது.

இதற்கிடையே பிக்பாஸில் கலந்துகொண்டபோது சக போட்டியாளரான லாஸ்லியாவை அவர் காதலித்ததாக கூறப்பட்டது. ஆனால் அதுகுறித்து இரண்டு பேரும் மௌனமே காத்து வந்தனர். இந்தச் சூழலில் கவினுக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. மோனிகா டேவிட் என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டார். அந்தத் திருமணத்தில் நெல்சன் திலீப்குமார், விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த சூழலில் கவின் ஸ்டார் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கியிருக்கிறார். இதில் கவினுடன் லால், அதிதி போகாங்கர் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றன. முழுக்க முழுக்க கல்லூரி மற்றும் இளைஞர்களை மையப்படுத்தி படம் உருவாகிவருவதாக தெரிகிறது.

படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் படத்தில் இடம்பெற்றிருக்கும் காலேஜ் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற சிங்கிள் வீடியோ வெளியாகியிருக்கிறது. பாடலை மதன் கார்க்கி எழுதியிருக்கிறார். பாடல் விண்டேஜ் ஸ்டைலில் உருவாகியிருக்கிறது. மேலும் கவின்90கள் கெட் அப்பில் தோன்றுகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் பாடல் ரிலீஸாகியிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். தற்போது இந்தப் பாடல் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

 

(Visited 2 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content