சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய கத்திக் குத்து தாக்குதல் – 4 பேர் காயம்
சிங்கப்பூர் – பாசிர் ரிஸ் வட்டாரத்தில் நிகழ்ந்த கத்திக் குத்துச் சம்பவத்தில் 4 பேர் காயமடைந்தனர்.
Pasir Ris West Plaza கடைத்தொகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. புளோக் 734, பாசிர் ரிஸ் ஸ்ட்ரீட் 72-இலிருந்து பிற்பகல் 4.50 மணிக்கு உதவிகேட்டு அழைப்பு வந்தது.
தாக்குதலில் தொடர்புடைய 61 வயது ஆடவர் பாதி நினைவிழந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
ஆபத்தான ஆயுதம் கொண்டு காயப்படுத்தியதற்காகப் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். மேலும் மூவரும் காயமடைந்துள்ளார்.
அவர்களில் 50 வயது மதிக்கத்தக்க 2 பெண்களும் ஓர் நபரும் அடங்குவர். அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் முன்பே அறிமுகமானவர்கள் என்று பொலிஸார் கூறினர். கத்திக் குத்து நடந்த இடத்தில் ஒரு கடைக்கு வெளியே தரையில் ரத்தக் கறைகள் தென்பட்டன.