தொடர்ந்து தாமதங்களை சந்தித்து வரும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம்!
இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு கட்டுநாயக்காவில் தரையிறக்கப்பட வேண்டிய விமானம் ஒன்று மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டுள்ளது.
குறித்த விமானமானது 204 பயணிகளுடன் அங்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிப்பதற்காக மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
சிவில் விமானப் போக்குவரத்து விதிமுறைகளின்படி இயக்கக் குழுவினர் தங்கள் விமானக் கடமை நேரத்தை மீறியதால், விமானம் மத்தளவில் தரையிறங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் குறித்த விமானம் சிங்கப்பூரில் இருந்து புறப்பட்ட போது தொழில்நுட்ப சிக்கல் காரணமாக தாமதமாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், தொழில்நுட்ப தாமதம் மற்றும் அதனைத் தொடர்ந்து மாற்றியமைப்பினால் ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தது.
அனைத்து பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கைகள் அவசியம் என்று வலியுறுத்தியது.