Zee Tamil “சரிகமப” நிகழ்ச்சியில் கலக்கப்போகும் இலங்கை சிறுமி!

இலங்கையின் பெருந்தோட்ட தொழிலாளியின் மகள் ஆஷினி சர்வதேச ரீதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஜீ தமிழின் “சரிகமப” இசை நிகழ்வில் பங்கேற்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கண்டி மாவட்டத்துக்குட்பட்ட புசல்லாவை – நயப்பன தமிழ் வித்தியாலய மாணவியான ஆஷினி இன்று காலை இந்தியா சென்றுள்ளார்.
இலங்கையில் பெருந்தோட்ட தொழிலாளியின் பிள்ளையொருவர் சர்வதேச ரீதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள “சரிகமப” இசை நிகழ்வில் பங்கேற்பது மலையக மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளது.
இதேவேளை, அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது
(Visited 40 times, 1 visits today)