ஈழத்தாய் ஈன்ற வெற்றி நாயகன் வாகீசன்… இவரின் கனவு என்ன தெரியுமா?

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாரதியார் நமது தமிழை புகழ்ந்து பாடியுள்ளார்.
அந்த வகையில், இலங்கை மண் பல திறமைசாளிகளை இவ்வுலகுக்கு அறிமுகப்படுத்தியது. இலங்கைத் தமிழுக்கு உலகளவில் ரசிகர்கள் இருக்கின்றார்கள்.
அதிலும் ஈழத்தமிழர்களின் தமிழ் வேறு எந்த மொழிகளுக்கு இணையாகாது.
இந்த தமிழுக்கு மேலும் பெறுமை சேர்க்கும் வகையில் பல களைஞர்கள் பாடல்களை பாடி வருகின்றார்கள்.
அந்த வகையில், யாழ்ப்பாணத்தமிழன் வாகீசன் ராசையா பற்றி உங்களுக்கு தெரியுமா?
தற்போது இவரைப்பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இவர் இலங்கையின் சிறந்த தமிழ் ராப்பர் மற்றும் பாடலாசிரியர்.
இவருக்கு ஆரம்பத்தில் ராப்பில் ஆர்வம் இல்லை. கிளாசிக்கல் தமிழில் கவிதைகள் மட்டுமே எழுதி வந்தார். ஆனால் 19 வயதில் ராப்பை பாடத் தொடங்கிய பிறகு, தமிழ் அறிவைப் பயன்படுத்தி ராப் பாடல்களை எழுதுவதற்கும் பழகிவிட்டார்.
ராப் பாடல்களை எழுதுவதற்கும் அப்பால், வாகீசன் ராப் சிலோன் என்ற இசை லேபிளை நிறுவியவர். சக பாடகரான ஆத்விக் உதயகுமார் மற்றும் இசை தயாரிப்பாளரான திஷான் விஜயமோகன் ஆகியோருடன் சேர்ந்து, சுயாதீன ராப் பாடல்களை வெளியிடுவதற்காக ராப் சிலோனை உருவாக்கினார்.
இருப்பினும், வாகீசனின் ஆர்வம் சுயாதீன ராப் இசைக்கு அப்பாற்பட்டது. வினோத் ராஜேந்திரன் எழுதி இயக்கிய ஃபைண்டர் படத்தின் ‘சிக்கிட்டா’ பாடலிலும் அவர் ராப் பாடியுள்ளார்.
இப்போது வாகீசன் மைனர் படத்தில் கதாநாயகனாக நடிக்கத் தயாராக உள்ளார். நடிப்புத் துறைக்கு அறிமுகமானதைப் பற்றி வாகீசன் கூறுகையில்,
“ஆரம்பத்தில் நான் ஒரு ராப்பர் அல்ல பாடலாசிரியர் அல்ல, ஆனால் இப்போது நான் ஒரு ராப்பர், பாடலாசிரியர். நான் ராப் பாடத் தொடங்கியபோது இருந்த அதே நம்பிக்கையுடன் நடிக்க முயற்சிக்க விரும்புகிறேன்.” என்றார்.
வாகீசன் தற்போது சன் டிவியில் டாப்பு குக்கு டூப்பு குக்கு நிகழ்ச்சியில் அருமையாக விளையாடி வருகின்றார். இந்த நிகழ்ச்சியும் வாகீசன் பிரபல்யமானதற்கு ஒரு காரணம் தான்.
இவ்வாறு ராப் பாடல், பாடலாசிரியர், நடிப்பு என்று பல திறமைகளை தன்னுள் அடக்கியுள்ள வாகீசன் ஈழத்தாய் ஈன்ற வெற்றி நாயகன்தான்….