சங்கீதா யாழ்ப்பாணத்து பொண்ணு.. விஜய் கூட த்ரிஷா ஆடினால் தியேட்டரைக் கொளுத்துவேன் – இலங்கை பிரபலம்
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆஃபீஸில் பட்டையைக் கிளப்பிக் கொண்டு இருக்கும், படம் என்றால் அது தி கோட்.
இப்படம் முதல் நாளே ரூபாய் 126.32 கோடிகளை வசூல் செய்தது. இதுமட்டும் இல்லாமல், படம் தொடர்ந்து பாக்ஸ் ஆஃபீஸில் ஹிட் அடித்து வருகின்றது. படத்தினை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். படத்தில் நடிகை த்ரிஷா, மட்ட பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
கோட் படத்தினை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதுமட்டும் இல்லாமல், படத்தில் விஜய்க்கு டீ-ஏஜிங் செய்யப்பட்டுள்ளது. மேலும் படத்தினைப் பொறுத்தவரையில், டெக்னிக்கலாக மிகவும் தரமான படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தின் இரண்டாம் பாதியில் இடம்பெற்றுள்ள மட்ட பாடலுக்கு நடிகை த்ரிஷா நடனமாடியுள்ளார். இதுவும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. மட்ட பாடலில் கில்லி படத்தில் இடம் பெற்றுள்ள ‘அப்படிபோடு’ பாடலின் நடன அசைவுகளும் இடம் பெற்றிருந்தது. இதுவும் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமைந்தது.
இப்படியான நிலையில், இலங்கைத் தமிழரான திருநங்கை தனுஜா, கோட் படத்தினை தனது தோழிகளுடன் ஜெர்மனியில் பார்த்துள்ளார். படம் பார்ப்பதற்கு முன்னதாக ஒரு வீடியோவை தனது மொபைலில் ரெக்கார்டு செய்துள்ளார். அதில் பேசிய விஷயங்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது, “இன்னைக்கு நாங்க கோட் படம் பார்க்க வந்துள்ளோம். இந்தப் படத்தினை நாங்க விஜய்க்காக பார்க்க வரவில்லை. அவருடைய மனைவி சங்கீதா அக்காவுக்காகத்தான் பார்க்க வந்துள்ளோம். சங்கீதா அக்கா எங்க ஊரு (இலங்கையில் உள்ள யாழ்பாணம்) பொண்ணு. அவங்க வீட்டுக்காரர் நடிச்ச படம் அப்படிங்கறதாலதான் இந்தப் படத்தை பார்க்க வந்தோம். இல்லை என்றால் இந்தப் படத்தைப் பார்க்க நாங்க வந்திருக்க மாட்டோம்.
எங்க சங்கீதா அக்காவுக்காகத்தான், அவருடைய கணவர் நடிக்கும் கடைசி படம் என்பதற்காகத்தான் வந்துள்ளோம். படத்தின் டிக்கெட்டுக்கு இருவருக்கு 50 யூரோவும், பாப்கார்ன் எல்லாம் சேர்த்து, மொத்தம் 100 யூரோ வந்துடுச்சு. இவ்வளவு செலவு செய்து நாங்கள் படம் பார்க்க வந்துள்ளது, உங்களுக்காகவும் உங்களின் மகன் சஞ்சய்க்காகவும்தான். படம் பார்த்துட்டு படம் எப்படி இருக்குனு சொல்றோம்.
படத்தில் திரிஷா ஒரு பாட்டுக்கு ஆடுகின்றாராம். த்ரிஷா ஆடும்போது தியேட்டரையே கொழுத்திவிட்டுவிடுவேன். சங்கீதா அக்கா நீங்க கவலைப்படாதீங்க. த்ரிஷா ஆடும்போது நான் தியேட்டரையே கொழுத்து விட்டுவிடுவேன். சங்கீதா அக்கா, நான் உங்களுக்காக நிற்பேன். நான் உங்கள் ஊர் பொண்ணு. கவலைப்படாதீங்க அக்கா” என பேசியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் திருநங்கை தனுஜா, இலங்கைத் தமிழர் மட்டும் இல்லாமல், பல் மருத்துவரும் கூட. மேலும் தனது சொந்த வாழ்க்கையில் அவர் எதிர்கொண்டவற்றை தனது ஆட்டோபயோகிராபி புத்தகமான, தனுஜா – ஈழத் திருநங்கையின் பயணுமும் போராட்டமும்” என்ற பெயரில் எழுதியுள்ளார். இப்புத்தகம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 5 லட்சம் பேர் பின் தொடருகின்றனர்.