இலங்கையர் தினம் இரத்து?
இலங்கையில் அடுத்த வாரம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த இலங்கையர் தின நிகழ்வு இரத்து செய்யப்பட்டுள்ளது என்று சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் நிலையை அடுத்தே ஜனாதிபதியால் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையர் தின நிகழ்வுகளை நடத்துவதற்காக ஒதுக்கப்பட்ட 300 மில்லியன் ரூபாயை நிவாரண நடவடிக்கைக்கு பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இம்மாதம் 12,13 மற்றும் 15 ஆம் திகதிகளில் இலங்கையர் தின நிகழ்வை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




