இலங்கை: தேர்தல் சட்ட மீறல் தொடர்பில் முறைப்பாடுகளைத் தெரிவிக்க விசேட வேலைத்திட்டம்!
ஜனாதிபதித் தேர்தலின் போது, அரச அதிகாரிகளால், தேர்தல் சட்டம் மீறப்படுமாயின் அது தொடர்பில், முறைப்பாடுகளைப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
அதன்படி 076-7914696 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது 011-2505566 என்ற தொலைநகல் இலக்கத்திற்கோ முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்க முடியும் என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த முயற்சி சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சமீபத்தில், மனித உரிமைகள் ஆணையம் இந்த நோக்கத்தை எளிதாக்கும் வகையில் காவல்துறை அதிகாரிகள் உட்பட அரசு அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வெளியிட்டது.





