உலகின் மிக நீளமான முத்திரையை வெளியிட்டுள்ள இலங்கை

205 மி.மீ அளவுள்ள உலகின் மிக நீளமான முத்திரை இலங்கையின் தபால் திணைக்களத்தினால் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 20) வெளியிடப்பட்டது.
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) படி, இந்த முத்திரையானது கண்டியில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா பெரஹெராவை அடையாளப்படுத்துவதாகவும், இதன் மதிப்பு ரூ. 500 எனவும் தெரிவித்துள்ளது.
வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, உலகின் மிக நீளமான முத்திரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வழங்கப்பட்டது.
(Visited 21 times, 1 visits today)