இலங்கை : சந்தேகநபரை கண்டுப்பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சந்தேக நபரைக் கைது செய்வதற்கு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
அம்பலாங்கொடை காவல் பிரிவில் காலி-கொழும்பு பிரதான சாலையில் உள்ள உரவத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் குறித்த இளைஞர் தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெல்லேஜ் சமத் ஹர்ஷக பாதும் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள நபர் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும், அவரை கண்டுப்பிடிக்க உதவுமாறும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேற்படி இளைஞர் பற்றிய தகவல் தெரிந்தால் கீழ் காணும் இலக்கத்திற்கு அழைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
தலைமையக தலைமை காவல் ஆய்வாளர் அம்பலாங்கொடை:- 071 – 8591484
எல்பிட்டிய பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு:- 091-2291095
(Visited 3 times, 1 visits today)