இலங்கை : உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் தொடர்பில் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படுவதற்கு முன்னர் உத்தியோகபூர்வமற்ற தேர்தல் முடிவுகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அனைத்து ஊடக தளங்களையும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்ட தேர்தல் ஆணையம், செப்டம்பர் 25 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை, தேர்தல் செய்திகளை வெளியிடுவதற்கான ஊடக வழிகாட்டுதல்களை கடைபிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
அனைத்து அச்சு, ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக பயனர்கள் வர்த்தமானியை கடைபிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
(Visited 22 times, 1 visits today)