இலங்கை: தெதுரு ஓயாவின் தாழ் நிலப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
இன்று பிற்பகல் 3:30 மணி நிலவரப்படி தெதுரு ஓயா நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியதையடுத்து நீர்ப்பாசன திணைக்களம் அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நீர்வரத்து வினாடிக்கு 18,000 கன அடி வீதம் தற்போது வெளியேறும் நிலையில், கசிவு நீர் வெளியேற்றம் மேலும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
தெதுரு ஓயா பள்ளத்தாக்கின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். வாரியபொல, நிக்கவெரட்டிய, மஹவ, கொபேகனே, பிங்கிரிய, பல்லம, சிலாபம், ஆராச்சிக்கட்டுவ, மற்றும் ரஸ்நாயக்கபுர ஆகிய பிரதேசங்கள் பாதிக்கப்பட்ட பிரதேசங்களாகும்.
இந்த பகுதிகளில் வசிப்பவர்களும், வாகன ஓட்டிகளும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
(Visited 4 times, 4 visits today)