இலங்கை இறப்பர் துறையை நவீனமயமாக்க ஐரோப்பிய ஒன்றியம் நிதியுதவி
இலங்கையின் இறப்பர் துறையை நவீனமயமாக்கி, பசுமைப் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் 8 மில்லியன் யூரோ (சுமார் 2.5 பில்லியன் ரூபாய்) நிதியுதவியை வழங்கியுள்ளது.
‘அக்ரிகிரீன்’ (AgriGreen) என பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்திற்கான உத்தியோகபூர்வ ஒப்பந்தம் நிதி அமைச்சில் இன்று கையெழுத்திடப்பட்டது.
இந்தத் திட்டத்தின் மூலம் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இறப்பர் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், குறிப்பாகப் பெண் விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது.
சர்வதேசச் சந்தையில் இலங்கை இறப்பருக்கான கேள்வியை அதிகரிப்பதோடு, உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இந்த நிதியுதவி பயன்படுத்தப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.





