கெட்டி மேளத்தில் முக்கிய நடிகர் திடீர் மாற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஜீ தமிழில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய சீரியல் கெட்டி மேளம். இந்த சீரியலில் வெற்றி என்கிற கதாபாத்திரத்தில் நாயகனாக சிப்பு சூரியன் நடித்து வந்தார்.
சீரியல் தொடங்கி ஒரு வருடம் ஆவதற்குள் சில மாற்றங்கள் நடந்துவிட்டது, முடியப்போவதாகவும் கூறினார்கள். அப்படி தான் இப்போது ஒரு தகவல் வந்துள்ளது.
அதாவது சீரியலில் வெற்றி கதாபாத்திரத்தில் நடித்துவந்த சிப்பு சூரியன் தொடரில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.
சில தினங்களுக்கு முன் முறைப்படி தெரிவித்துவிட்டு தொடரில் இருந்து விலகியுள்ளார். ஒருபக்கம் அவரது கதாபாத்திரத்திற்கு சரியான முக்கியத்துவம் இல்லை என்பதால் வெளியேறினார் என்கிறார்கள்.
மறுபக்கம் நாயகி சாயா சிங்குடன் சிப்பு சூரியனுக்கு ஏற்பட்ட பிரச்சனை தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அவர் வெளியேறியதற்கான சரியான விவரம் எதுவும் தெரியவில்லை.
தற்போது வெற்றி கதாபாத்திரத்தில் இனி நடிக்கப்போவது நடிகர் ஸ்ரீ தானாம்.