கொழும்பு வாழ் மக்களுக்கு விசேட அறிவிப்பு!
கொழும்பின் பல பகுதிகளில் இன்று நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்பத்தலேயில் இருந்து தெஹிவளை வரையிலான பிரதான குழாய்வழியில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் (NWSDB) அறிவித்துள்ளது.
இதன்படி,
• மொரட்டுவ
• ராவதவத்த
• சொய்சாபுர
• ரத்மலானை
• கல்கிஸ்ஸை
• தெஹிவளை
• வெள்ளவத்தை
• பாமன்கட
• முல்லேரியா
• கொலன்னாவை ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் முழுமையாக தடைப்பட்டுள்ளதுடன், பத்தரமுல்ல பகுதியில் வசிப்பவர்கள் குறைந்த அழுத்தத்தில் நீரை பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இன்று நள்ளிரவுக்குள் அனைத்து பகுதிகளுக்குமான நீர் விநியோகத்தை மீட்டெடுக்க எதிர்ப்பார்ப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





