அரசியல் இலங்கை செய்தி

சபாநாயகர் பதவி விலக வேண்டியதில்லை: NPP திட்டவட்டம்!

சபாநாயகர் பதவி விலகமாட்டார் என்று தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் நிஹால் அபேசிங்க Nihal Abeysinghe தெரிவித்தார்.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணை நடத்தவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, சுயாதீன விசாரணைக்கு இடமளித்து சபாநாயகர் பதவி விலகவேண்டும் என எதிரணி வலியுறுத்தியுள்ளது.

அரசியலமைப்பு பேரவையின் தலைவரான சபாநாயகர், இந்த விசாரணையை கருத்தில் கொண்டு பதவி விலக வேண்டும் எனவும் அழுத்தம் கொடுத்தப்பட்டுவருகின்றது.

இந்நிலையிலேயே தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

“ குற்றச்சாட்டை எவரும் சுமத்தலாம், அதற்காக பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை.

விசாரணை நடத்தப்பட்டு அதன் முடிவு வெளியாகிய பின்னர் தான் எந்த தீர்மானமும் எடுக்கப்படும் .” என்றும் தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் நிஹால் அபேசிங்க மேலும் கூறினார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!