சிங்கப்பூரில் தென்மேற்குப் பருவமழை காலம் தொடர்பில் மக்களுக்கு முக்கிய தகவல்
சிங்கப்பூரில் தென்மேற்குப் பருவமழை காலம் தொடர்பில் பொது மக்களை வழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பருவமழை இம்மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் எனவும் இம்மாதத்தின் முற்பகுதியில் பெரிதாகக் காற்று வீசாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதத்தின் முதல் 2 வாரங்களில், அதிகாலையிலிருந்து காலைவரை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். பலத்த காற்றையும் எதிர்பார்க்கலாம்.
சில இடங்களில் பிற்பகலிலும் மழை பெய்ய வாய்ப்பு உண்டு. அத்துடன் மாதத்தின் முற்பாதியில் மொத்த மழைப்பொழிவு சராசரி அளவை எட்டக்கூடும்.
தினசரி வெப்பநிலை 33 இலிருந்து 34 டிகிரி செல்சியசுக்கு இடைபட்டிருக்கும். சில நாட்களில் வெப்பநிலை 35 பாகை செல்சியசை எட்டக்கூடும். இரவில் வெப்பமும் ஈரப்பதமும் அதிகமாக இருக்கும்
இரவில் வெப்பநிலை 29 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது