வடகொரியாவின் இரகசிய பகுதிகளை படம் பிடித்த தென்கொரியா! ட்ரோன்கள் பறந்ததால் சர்ச்சை!
தென் கொரியா இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில் ட்ரோன்களை பறக்கவிட்டதாக வட கொரியாவின் இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
குறித்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தென்கொரியா மன்னிக்க முடியாத விளைவுகளை சந்திக்க நேரிடும் என வடகொரிய இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வட கொரியாவின் எல்லை நகரத்தின் மீது பறந்து கொண்டிருந்த தென் கொரிய ட்ரோன்களை வீழ்த்த சிறப்பு மின்னணு போர் உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ட்ரோன்களில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்கள் மூலம் வடகொரியாவின் இரண்டு பகுதிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் வடகொரியாவின் மேற்படி குற்றச்சாட்டுக்களை தென்கொரிய இராணுவம் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





