விளையாட்டு

நியூசிலாந்தை வீழ்த்தி T-20 தொடரை வென்றது தென்னாபிரிக்கா!

நியூசிலாந்து New Zealand மற்றும் தென்னாபிரிக்கா South Africa அணிகளுக்கிடையிலான கடைசி T – 20 போட்டியில் வெற்றிபெற்று, தொடரை 3-2 என்ற அடிப்படையில் தென்னாபிரிக்கா அணி கைப்பற்றியுள்ளது.

தென்னாபிரிக்கா அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.

ஏற்கனவே 4 போட்டிகள் முடிந்த நிலையில் தொடர் 2-2 கணக்கில் சமநிலையில் இருந்தது.

இந்நிலையில் இன்று (25) 5-வது T20 போட்டி Hagley Oval
மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து 188 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களைப் பெற்றது.

இதன் அடிப்படையில் தென்னாபிரிக்கா அணி 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியது.

ஆட்ட நாயகனாகவும், தொடர் ஆட்ட நாயகனாகவும் தென்னாபிரிக்க வீரர் Connor Esterhuizen தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!