நடிகர் சூரியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
காமெடி நடிகராக தனது பயணத்தை தொடங்கி இன்று தமிழ் சினிமா கொண்டாடும் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூரி.
கடைசியாக இவரது நடிப்பில் வெளியான மாமன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கலக்கியது. விடுதலை, கருடன், கொட்டுக்காளி என தொடர்ந்து வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் நடிக்கிறார்.
அடுத்து ஏழு கடல் ஏழு மலை, மண்டாடி போன்ற படங்கள் இவரது நடிப்பில் வர உள்ளது. இன்று சூரி தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்த நிலையில் அவரது சொத்து மதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கும் நடிகர் சூரியின் சொத்து மதிப்பு ரூ. 70 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.





