அரசனில் இணையும் சூப்பர் ஸ்டார்கள்
இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் அரசன் திரைப்படத்தில் பல நடிகர்கள் இணைந்துள்ளனர்.
இப்படத்தில் நடிகர் அமீரின் ராஜன் கதாபாத்திரம் இருக்கிறதாம். அதனால், அமீர் நடிக்கிறார்.
நடிகர்கள் உபேந்திரா, கிச்சா சுதீப்பிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கிச்சா சுதீப் ஒப்புக்கொள்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படப்பிடிப்புகான செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், அரசன் படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். அனிருத்தின் பிறந்த நாளான 16ஆம் திகதி இப்படத்தின் ப்ரோமோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.






