செய்தி விளையாட்டு

மாபெரும் வரலாறு படைத்த ஸ்மிருதி மந்தனா

இந்திய மகளிர் அணியின் முன்னணி வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா மாபெரும் வரலாற்று சாதனை ஒன்றை செய்து இருக்கிறார்.

2024 ஆம் ஆண்டு அதிக ரன் குவித்த வீராங்கனை என்ற சாதனையை அவர் செய்து இருக்கிறார்.

மகளிர் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் எடுக்கப்பட்ட அதிக ஸ்கோர் என்ற சரித்திர சாதனையை அவர் படைத்து இருக்கிறார்.

மேலும், தொடர்ந்து ஐந்து சர்வதேச இன்னிங்ஸ்களில் 50 ரன்களுக்கும் மேல் அடித்து இருக்கிறார்.

வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

துவக்க வீராங்கனையாக விளங்கிய ஸ்மிருதி மந்தனா 102 பந்துகளில் 91 ரன்கள் எடுத்தார். ஹர்லீன் தியோல் 44 ரன்கள், பிரதிகா ராவல் 40 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் எடுத்தது. அடுத்த ஆடிய வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, இதை அடுத்து இந்திய அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது.

அபாரமாக ஆடிய ஸ்மிருதி மந்தனா தான் ஆடிய கடைசி ஐந்து இன்னிங்ஸ்களில் 50 ரன்களுக்கும் மேற்பட்ட ரன்களை எடுத்து சாதனை படைத்தார்.

மேலும் எந்த ஒரு ஆண்டிலும் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை ஆகவும் சாதனை படைத்தார். 2024 ஆம் ஆண்டில் மட்டும் அவர் 1602 ரன்கள் எடுத்து இருக்கிறார்.

இரண்டாவது இடத்தில் தென்னாப்பிரிக்காவின் லாரா உல்வார்ட் இருக்கிறார்.

அவர் 1593 ரன்கள் எடுத்து இருக்கிறார். மூன்றாவது இடத்தில் இங்கிலாந்து வீராங்கனை நாட் சைவர்-பிரண்ட் இருக்கிறார்.

அவர் 2022 ஆம் ஆண்டில் 1346 ரன்கள் எடுத்திருந்தார். நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் ஸ்மிருதி மந்தனாவே தான் இருக்கிறார்.

2018 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் ஸ்மிருதி மந்தனா 1291 ரன்கள் எடுத்திருந்தார். 2022 ஆம் ஆண்டில் அவர் 1290 ரன்கள் எடுத்திருந்தார்.

இதன் மூலம், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனை என்பதை அவர் மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

(Visited 14 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி