பொழுதுபோக்கு

சிவகார்த்திகேயனுக்கு விரைவில் 3-வது குழந்தை பிறக்கபோகுது… குவியும் வாழ்த்து

சிவகார்த்திகேயன் – ஆர்த்தி ஜோடிக்கு ஆராதனா, குகன் தாஸ் என இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், விரைவில் 3வது குழந்தை பிறக்கப்போகிறதாம்.

கோலிவுட்டின் இளவரசனாக கொண்டாடப்படுபவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தன்னுடைய கடின உழைப்பால் முன்னேறி இன்று விஜய், அஜித்துக்கு நிகரான இடத்தை பிடித்துள்ள இவர், சினிமாவில் எண்ட்ரி கொடுக்கும் முன்னரே திருமணம் செய்துகொண்டார்.

இவர் விரைவில் மற்றுமொரு குழந்தைக்கு தந்தையாக இருக்கிறார். தற்போது சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி கர்ப்பமாக உள்ளது தெரியவந்துள்ளது. விரைவில் இந்த ஜோடிக்கு மூன்றாவது குழந்தை பிறக்க உள்ள தகவல் தான் தற்போது கோலிவுட்டில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் ரசிகர் ஒருவரின் இல்ல விழாவில் கலந்துகொண்டபோது எடுத்த வீடியோ வெளியானது.

அந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய மனைவி ஆர்த்தி உடன் வந்து கலந்துகொண்டார். அப்போது ஆர்த்தி கர்ப்பமாக இருக்கும் தகவல் தெரியவந்துள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் விரைவில் 3-வது குழந்தைக்கு தந்தையாக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சினிமாவிலும் செம்ம பிசியாக உள்ள சிவகார்த்திகேயன் தற்போது வரிசையாக படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!