சிவகார்த்திகேயனின் திடீர் விசிட்டால் பதட்டத்தில் கொடம்பாக்கம்
சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார்.
அடுத்து டான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் சமீபத்தில் மும்பையில் உள்ள திரைப்பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் அலுவலகத்திற்கு சென்று அவரை சந்தித்தார்.
தற்போது இந்த சந்திப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சந்திப்பு குறித்து சிவா எதுவும் தெரிவிக்காத நிலையில்,
தொடர் வெற்றிகளை அடித்து சிவா பாலிவுட் சினிமா பக்கம் செல்ல வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(Visited 2 times, 2 visits today)





