சிவகார்த்திகேயனின் கியூட் குடும்பப் பொங்கல்: மனைவி, பிள்ளைகளுடன் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ!
தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட மிக அழகான புகைப்படத்தைப் பகிர்ந்து ரசிகர்களுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய பின்னணியில் தென்னங்கீற்று மற்றும் இரண்டு பெரிய கரும்புகளைத் தோரணமாகப் பிடித்துக் கொண்டு, சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் பொங்கல் மணம் மாறாமல் காட்சியளிக்கிறார்.

ஆடம்பரமான செட்டிங் எதுவுமில்லாமல், தனது மனைவி ஆர்த்தி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் மிகவும் எதார்த்தமாக இந்தப் புகைப்படத்தில் சிவகார்த்திகேயன் காட்சியளிக்கிறார்.
மேலும் தனது இணையதளத்தில் ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்தும் தெரிவித்துள்ளார் அவர் வெளியிட்ட வாழ்த்து.
பொங்கலோ பொங்கல்!!
உங்கள் உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும் 🙏🙏
அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள் 😊🙏

என அவர் பதிவிட்டுள்ள இந்த அழகான குடும்பப் படம் வெளியான
சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான லைக்குகளைக் குவித்து வருகிறது.





