“பராசக்தி“க்காக இலங்கை வந்தார் சிவகார்த்திகேயன்…

தென்னிந்திய நடிகர் சிவகார்த்திகேயன் உட்பட படக்குழுவினர் இன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இயக்குநர் சுதா கொங்காரா இயக்கிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, காரைக்குடியில் நடைபெற்றது. தொடர்ந்து, மதுரையில் சில நாட்கள் படப்பிடிப்பை நடத்தினர்.
இந்நிலையில், பராசக்தியின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் ஆரம்பிக்கவுள்ளது. இதற்காக, சிவகார்த்திக்கேயன் மற்றும் இயக்குனர் சுதா கொங்காரா உள்ளிட்ட படக்குழு இலங்கை வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தை சனிக்கிழமை (08) வந்தடைந்த சிவகார்த்திக்கேயனுக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் யாழ்ப்பாணம் செல்ல உள்ளதாகவும், அங்கு யாழ். நூலகத்தில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.