சிங்கம், புலிக்கு அப்புறம் இப்போ யானை! சிவகார்த்திகேயனின் தத்தெடுப்புப் பட்டியல் இதோ.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், திரையில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஒரு ‘ரியல் ஹீரோ’ என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். சென்னை அருகே உள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ‘பிரக்ருதி’ (Prakruti) என்ற பெண் யானையை அவர் தத்தெடுத்துள்ளார்.

பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அடுத்த 6 மாத காலத்திற்கு இந்த யானைக்கான உணவுத் தேவைகள், மருத்துவப் பராமரிப்பு மற்றும் தினசரி செலவுகள் அனைத்தையும் சிவகார்த்திகேயன் ஏற்றுக்கொண்டுள்ளார். இதற்கான காசோலையை அவர் பூங்கா அதிகாரிகளிடம் வழங்கியுள்ளார்.
சிவகார்த்திகேன் விலங்குகளை தத்தெடுப்பது முதல் முறை அல்ல! கடந்த ஆண்டுகளிலும் அவர் இதுபோல் பலதடவைகள் தத்தெடுத்துள்ளார்
இந்த செயலானது சிவகார்த்திகேயன் விலங்குகள் மீது அவர் கொண்டுள்ள அன்பைக் காட்டுகிறது.
இந்த அன்பு இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. அவரது தத்தெடுப்பு வரலாறு இதோ:
| ஆண்டு | தத்தெடுக்கப்பட்ட விலங்கு | விலங்கின் பெயர் |
| 2018 – 2020 | வெள்ளைப்புலி | அனு (Anu) |
| 2021 | சிங்கம் & யானை | விஷ்ணு (Vishnu) & பிரக்ருதி (Prakruti) |
| 2023 | சிங்கம் | ஷெரு (Sheru) |
| 2025 | சிங்கம் & புலி | ஸ்ரேயர் (Shreyar) & யுகா (Yuga) |
| 2026 | யானை | பிரக்ருதி (Prakruti) |
“விலங்குகளைப் பாதுகாப்பது மக்கள் ஒவ்வொருவரின் கடமை. வண்டலூர் பூங்காவில் உள்ள 170-க்கும் மேற்பட்ட விலங்கினங்களில், உங்களால் முடிந்த ஏதேனும் ஒன்றை நீங்களும் தத்தெடுக்க முன்வாருங்கள்” என சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சினிமாவில் ‘பராசக்தி’ (2026 பொங்கல் ரிலீஸ்) படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்கும் நிலையிலும், தனது சமூகக் கடமையை அவர் மறக்கவில்லை என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.





