குகேஷுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிவகார்த்திகேயன்…
உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற கிராண்ட்மாஸ்டர் குகேஷை சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன், அவருக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் ஒன்றையும் கொடுத்துள்ளார்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன்.
இவர் நடிப்பில் அண்மையில் ரிலீஸ் ஆன அமரன் திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆனது. இந்த ஆண்டு அதிக வசூல் அள்ளிய தமிழ் படங்களின் பட்டியலில் அமரன் இரண்டாம் இடம் பிடித்து அசத்தியது. ராஜ் குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான அப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்தது.
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் அண்மையில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷை நேரில் சந்தித்து அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்ததோடு, காஸ்ட்லியான வாட்ச் ஒன்றையும் பரிசாக கொடுத்திருக்கிறார்.
குகேஷ் சிறு வயதில் இருந்தே சிவகார்த்திகேயனின் தீவிர ரசிகராம். இதை அறிந்த சிவகார்த்திகேயன் சர்ப்ரைஸாக அவரை சந்தித்து வாட்ச் ஒன்றை பரிசாக வழங்கி இருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.