சிறகடிக்க ஆசை சீரியலுக்கு எகிறிய டிஆர்பி….
விஜய் டிவியின் டாப் சீரியலாக தற்போது மாறி இருக்கிறது சிறகடிக்க ஆசை. இந்த தொடரில் அடாவடி ஹீரோ, அப்பாவி மருமகள், வில்லி மாமியார் என கதை பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த தொடர் ஏற்கனவே பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட மற்ற தொடர்களை டிஆர்பி ரேட்டிங்கில் பின்னுக்கு தள்ளிவிட்டது.
தற்போது கடந்த வாரத்திற்கான ரேட்டிங் வெளியாகி இருக்கிறது. அதில் சிறகடிக்க ஆசை Urban பகுதியில் 10.5 புள்ளிகள் பெற்று இருக்கிறது.
மேலும் Urban + rural இணைந்து 8.84 புள்ளிகள் கிடைத்து இருக்கிறது. சீரியல் தொடங்கியதில் இருந்து இது அதிகபட்ச ரேட்டிங் என சொல்லப்படுகிறது.

(Visited 10 times, 1 visits today)





