இப்படி மாட்டிக்கிட்டியே பங்கு… சிறகடிக்க ஆசை பரபரப்பு ப்ரோமோ

சீரியல்கள் என்றாலே பெண்கள் பார்க்கும் காலம் போய், தற்போது பெண்களுக்கு இணையாக ஆண்களும் சீரியல்களை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை.
அதிலும் சன்டிவி, விஜய் டிவி சீரியல்கள் தான் அதிகம் மக்கள் மத்தியில் பெரிதும் பார்க்கப்படுகின்றது.
இதில், இரு செனல்களும் போட்டி போட்டு சீரியல்களை ஒளிபரப்புவார்கள். இதில் சன்டிவி தான் டாப்பில் இருக்கும். ஆனால் சன்டிவி சீரியலுக்கும் டாப் கொடுக்கும் விஜய் டிவியின் ஒரே ஒரு சீரியல் தான் “சிறகடிக்க ஆசை”.
இந்த சீரியலில் ஒவ்வொரு நாளும் நடப்பவற்றைப் பற்றி இனிவரும் தொகுப்பில் நாம் பார்ப்போம்.
இறுதியாக வெளிவந்த ப்ரோமோவில்,
பூக்கடை திரும்ப வந்ததற்கு அருண்தான் காரணம் என சீதா நினைத்திருந்தார். ஆனால், அதற்கு முத்துதான் காரணம் என உண்மை தெரியவந்தவுடன், அருணிடம் சண்டை போட்டுவிட்டு, தனது அம்மாவின் வீட்டிற்கு வந்துவிட்டார். இதை கேள்விப்பட்ட முத்து தனது மனைவி மீனாவுடன் சீதாவை பார்க்க வந்தார்.
வந்தவர் வாயை வைத்து சும்மா இருக்காமல், இதில், “அவன் ஏதாவது சொன்னால் நீயும் கோபப்படாத. அவருக்கு பொலிஸ் திமிருடன் இணைந்து ஈகோவும் இருக்கு. அடிக்கடி அரை மெண்டல் மாதிரி நடந்துக்குவான்” என முத்து சொல்லி முடிப்பதற்குள், வீட்டிற்குள் இருந்து அருண் வருகிறார்.
சும்மாவே கீரியும் பாம்புமாக இருக்கும் இவர்களுக்கு இந்த சம்பவம் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் இந்த சம்பவம் உள்ளது.
இனி சிறகடிக்க ஆசையில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.