சிம்பு கொடுத்த பிறந்தநாள் பரிசு… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
சிம்பு இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். நேற்றிலிருந்து சோசியல் மீடியாவில் அவருடைய ஹாஷ் டாக் தான் வைரலாகி வருகிறது.
அதில் டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராம்குமார் இயக்கத்தில் STR 49 பட அறிவிப்பு வெளிவந்தது. அதை தொடர்ந்து தற்போது அவருடைய 50வது பட அப்டேட் அதிகாரப்பூர்வமாக வந்துள்ளது.
இதில் என்ன ஒரு ஸ்பெஷல் என்றால் இதன் மூலம் சிலம்பரசன் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.
ஆத்மன் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் அவரின் 50வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார்.
ஏற்கனவே ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இப்படம் உருவாக இருந்தது. சில காரணங்களால் தற்போது சிம்புவே இப்படத்தை தயாரிக்கிறார்.
அந்த போஸ்டரை வெளியிட்டுள்ள சிம்பு நீங்க இல்லாமல் நான் இல்லை. ஐம்பதாவது படம் மூலம் தயாரிப்பாளர் ஆகிறேன்.
இது எனக்கு மட்டுமல்ல தேசிங்கு பெரியசாமியின் கனவு படம் ஆகும். உங்களுடைய அன்பும் ஆதரவும் எங்களுக்கு வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் போஸ்டரும் அதிக கவனம் பெற்றுள்ளது. அதில் சிம்பு சிறு பையன் தோற்றத்தில் கையில் தீப்பந்தத்துடன் இருக்கிறார்.
அவருக்குப் பின் போர்க்களம் போன்ற காட்சியும் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே இப்படம் பீரியட் கதை என்பது அனைவருக்கும் தெரியும்.
அதில் தற்போது வெளிவந்துள்ள போஸ்டர் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.