கமலுக்கான கோட்டையில் ராஜாவாகிய சிம்பு… யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்
 
																																		வருசத்துக்கு ஒரு படத்தை கொடுப்பதே சிம்புவுக்கு குதிரைக்கொம்பாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் இவருடைய படங்களுக்கு ரசிகர்கள் அதிக வரவேற்பை கொடுத்து வருகிறார்கள்.
அப்படிப்பட்ட சிம்பு கடைசியாக நடித்த பத்து தல படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் சிம்பு நடிப்பு அனைவரையும் கவர்ந்து விட்டது என்றே சொல்லலாம்.
இதனைத் தொடர்ந்து அடுத்த படத்திற்கு கமல் தயாரிப்பில் கூட்டணி வைத்தது அப்படியே டிராப் ஆகிவிட்டது. அதனால் இவரை சமரசம் செய்யும் வகையில் கமல் மணிரத்தினம் இயக்கத்தில் நடிக்கும் தக்லைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை கொடுத்து விட்டார்.

இதற்கிடையில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இந்தியன் 2 படம் அடுத்த மாதம் 12ஆம் தேதி வெளிவர இருக்கிறது. அந்த வகையில் இந்தியன் 2 படத்தின் பிரமோஷன் வேலைகள் அனைத்தும் நடைபெற்று வருகிறது.
இது சம்பந்தமாக சமீபத்தில் ஒரு விழா நடைபெற்ற பொழுது அதில் கமல் மற்றும் இந்தியன் 2 படக்குழு அனைவரும் கலந்து கொண்டார்கள். அப்பொழுது அதில் சிம்புவும் நுழைந்தபொழுது யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு அவருக்கு கிடைத்த வரவேற்பு கைதட்டலை பார்க்கும்பொழுது ரொம்பவே பிரமிக்க வைத்திருக்கிறது.

இன்னும் சொல்ல போனால் கமல் கூட இந்த அளவிற்கு ஒரு வரவேற்பை எதிர்பார்த்து இருக்கவில்லை. அந்த அளவிற்கு இவருக்கு கிடைத்த மரியாதை விட ராஜா மரியாதை சிம்புவுக்கு கிடைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி விட்டது. இதனை எதிர்பார்க்காத சிம்புவே பூரித்து போய் இருக்கிறார்.
இதனை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் சிம்பு மீது ஏற்பட்டுள்ள சர்ச்சைகளை நீக்கி தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து எந்த பிரச்சனையிலையும் சிக்கிக் கொள்ளாத அளவிற்கு இருந்தால் ரசிகர்கள் சிம்புக்கு இன்னும் ஏகபோக வரவேற்புகளை கொடுத்து வரவேற்பார்கள்.

 
        



 
                         
                            
