புதிய பட அறிவிப்புக்குப் பின் சிம்பு சென்ற இடம் எது தெரியுமா?
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் வேலையாக கோவிலுக்கு புறப்பட்டுச்சென்றுள்ளார்.
இதையடுத்து, வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் இன்று காலை தியானத்திலும் ஈடுபட்டார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் பெயர் “அரசன்” என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை கலைப்புலி தாணு தனது டுவிட்டர் தளத்தில் நேற்று வெளியிட்டார்.

ஒரு காலக்கட்டத்தில் கொடிகட்டிப்பறந்த சிம்பு இடைப்பட்ட காலங்களில் காணாமல் போயிருந்தார்.
படங்கள் இன்றி, உடல் பருமனாகி பறிதாபமான நிலையில் இருந்தார். இப்படியிருக்க இவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம்தான் “மாநாடு”.
சிம்புவை பழைய தோற்றத்தில் திரையில் கண்டதும் அவரது ரசிகர்களுக்கு நிம்மதி பெருமூச்சாக இருந்தது.
உடல் தோற்றத்தை மாற்றி முதலில் வெளியான படம் ஈஸ்வரன். ஆனால் இந்த படம் அவருக்கு வெற்றியை தரவில்லை.
இதையடுத்து சிம்பு – மணிரத்னம் – கமல் கூட்டணியில் உருவாகிய தக்லைஃப் படம் எதிர்பார்ப்பை எகிற வைத்தது.
ஆனால் படம் ரிலீஸாகிய பின் புஸ்வானம் போல் ஆகிவிட்டது. பட்டி தொட்டி எங்கும் ட்ரோல் செய்யப்பட்டது.
இது தாங்க முடியாமல் சிம்பு டுபாய்க்கு ஓடியதாகவும் சில செய்திகள் உலா வந்தன.

இப்போது சிம்பு கம்பெக் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார். ஆகவே நல்ல கதையை தேர்ந்தெடுப்பது அவருக்கு முக்கியமாக கருதப்படுகின்றது.
இப்படியிருக்கும் நிலையில் தான் சிம்பு – வெற்றிமாரன் கூட்டணி அறிவிப்பு வெளியானது.
முதலில் தனுஸை வைத்து வெற்றிமாரன் எடுத்த வடசென்னை படத்தின் அடுத்த பாகம் தான் சிம்பு – வெற்றிமாரன் கூட்டணியில் உருவாகும் படம் என கூறப்பட்டது.
இதற்கு தனுஸூம் பச்சைக்கொடி காட்டியிருந்தார். இந்த நிலையிலேயே படத்தின் பெயர் “அரசன்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசனாவது வெற்றிவாகை சூட வேண்டும் என்ற கட்டாயத்தில், தனுஸ் ஆன்மீக பாதையில் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.






