3 படம் குறித்து பல வருடங்களுக்குப் பின் மனம் திறந்த ஸ்ருதி ஹாசன்
நடிகர் கமல் ஹாசனின் மூத்த மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் வலம் வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.
தற்போது இவர் தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ளார்.
நடிப்பை தாண்டி பின்னணி பாடகியாகவும் ரசிகர்களின் மனதை வென்றுள்ளார்.

இவர் நடிப்பில் தற்போது கூலி திரைப்படம் உருவாகி வருகிறது. மேலும் விஜய் சேதுபதியின் ட்ரைன் படத்தில் நடித்து வருகிறார். தற்போது கூலி படத்தின் பிரமோஷனில் கலந்து கொண்டு பல விஷயங்களை பேட்டிகளில் பகிர்ந்து வருகிறார். ஒரு பேட்டியொன்றில் 3 படத்தின் போது நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
அதில், 3 படத்தில் நடித்தபோது எனக்குள் மிகவும் பயம் இருந்துக்கொண்டே இருந்தது. காரணம் படத்தின் மையக் கதாபாத்திரமாக நான் இருக்கிறேன், ஜனனி ரோலை வைத்து தான் கதை சொல்லப்படுகிறது. அந்தகாலத்தில் எனக்குள் இருந்த பயத்தை போக்க தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மிகவும் உறுதுணையாக இருந்தனர்.
எப்போது நான் நெருக்கடிக்குள் தள்ளப்படுகிறேனோ, அப்போது எல்லாம் சிறப்பாகவே செயல்படுவேன் என்று எனக்கு தெரியும். ஆனால் 3 படத்தில் நடிக்கும் போது அது கூடுதலாகவே சிறப்பாக பணியாற்ற காரணமாக இருந்தது.
3 படம் இப்போது வெளியானால் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துவிடுவாரள். ஒய் திஸ் கொலவெறி பாடல் முன்பு எப்படி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோ, இப்போதும் அதைவிட கூடுதலாக மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கும்.

அப்போதே 3 படம் வணிகரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்க வேண்டும், ஆனால் ஏனோ தெரியவில்லை என்று கூறியிருக்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்.





