பொழுதுபோக்கு

கூலி ஷூட்டிங்… முதல் முறை சூப்பர் ஸ்டாருடன் இணையும் சுருதிஹாசன்

மாநகரம் தொடங்கி லியோ திரைப்படம் வரை தான் இயக்கிய அனைத்து திரைப்படங்களையும் வெற்றி திரைப்படங்களாக மாற்றிய இயக்குனர் தான் லோகேஷ் கனகராஜ்.

அவர் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. விரைவில் கமல்ஹாசனை வைத்து மீண்டும் ஒரு படத்தை அவர் இயக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று ஹைதராபாத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் அவரது 171-வது திரைப்படமான “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் துவங்கியுள்ளது.

விரைவில் சென்னையிலும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சூழலில் கோலிவுட் ரசிகர்களுக்கு மாபெரும் இன்ப அதிர்ச்சியாக இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நெருங்கிய நண்பரான உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுடைய மூத்த மகள் பிரபல நடிகை மற்றும் பாடகி சுருதிஹாசன் அவர்கள் படபிடிப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே அவரோடு இணைந்து “இனிமேல்” என்ற ஒரு இசை ஆல்பத்தில் நடித்திருந்தனர்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content