கமல் சம்பாதிக்கும் பணத்தை என்ன செய்கின்றார்?

நடிகர் கமல் ஹாசனின் மூத்த மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் வலம் வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். தற்போது இவர் தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ளார்.
நடிப்பை தாண்டி பின்னணி பாடகியாகவும் ரசிகர்களின் மனதை வென்றுள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் கூலி திரைப்படம் வெளியானது. இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், ஸ்ருதி ஹாசன் தனது தந்தை சம்பாதிக்கும் பணம் குறித்து பகிர்ந்துள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், ” படத்தின் தோல்வி எனது தந்தையை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. மேலும், அவர் சம்பாதிக்கும் பணத்தில் கார் அல்லது வீடு வாங்க விரும்பவில்லை, அனைத்துமே படங்களுக்கு செல்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
(Visited 1 times, 1 visits today)