இலங்கை

கல்முனை கடற்கரை பகுதிகளில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சிரமதான பணி

இராணுவத்தினரால் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடற்கரை பகுதிகளை சுத்தப்படுத்தல் விசேட வேலைத்திட்டம் இன்று(14) முன்னெடுக்கப்பட்டது.இதன் போது அம்பாறை மாவட்டம் இலங்கை இராணுவத்தின் 24 வது காலாட்படை பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் விபுல சந்திரசிறியின் ஆலோசனைக்கமைய 241 இராணுவ பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் தனிக பதிரட்ன வழிகாட்டலில் இராணுவ முகாம் சூழல் அமைந்துள்ள கடற்கரை மற்றும் அண்டிய பல பகுதிகள் சிரமதான பணியினை இராணுவத்தினர் முன்னெடுத்தனர்.

இதன்போது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்குடனும் டெங்கு நோயின் தாக்கத்தை இப்பிரதேசத்தில் கட்டுப்படுத்தும் முகமாகவும் கடற்கரை வீதியோரங்களில் தேங்கிக் காணப்பட்ட கழிவுகள் குப்பைகூழங்கள் காடுமண்டிய இடங்கள் யாவும் அகற்றி சுத்தப்படுத்தி சூழலை அழகுபடுத்தியமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி நடவடிக்கையின் போது கல்முனை மாநகரை தூய்மைப் படுத்தும் மாநகர ஆணையாளர் ஏ. எல். எம். அஸ்மியின் அறிவுறுத்தலுக்கமையை கல்முனை மாநகர சபை சுகாதாரப் பிரிவு பொறுப்பு உத்தியோகத்தர் யு. எம். இஸ்ஹாக் தலைமையில் மேற்பார்வை உத்தியோகத்தர்களின் நெறிப்படுத்தலில் இந்த சிரமதானப்பணிக்கு பங்களிப்பு வழங்கப்பட்டிருந்தது.

மேலும் இச்சிரமதானத்திற்கு கல்முனை உப பிரதேச செயலகத்தின் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நெறிப்படுத்தலில் இராணுவத்தினருடன் சமுர்த்தி பயனாளி குடும்பங்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் தங்களது பங்களிப்பினை வழங்கி சிரமதான பணியில் ஈடுபட்டனர். குறித்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பட்டதுடன் எதிர்காலங்களில் கல்முனை பிராந்தியத்தில் குப்பை கூழமில்லாமல் சுத்தமாக பேணுவதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் இராணுவ உயரதிகாரிகளினால் விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(Visited 7 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்