அமெரிக்காவின் சிகாகோ புறநகர் பகுதியில் துப்பாக்கிச்சூடு : 08 பேர் பலி!
அமெரிக்காவின் சிகாகோ புறநகர் பகுதியில் 03 இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 08 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல்தாரி தலைமறைவாகியுள்ளதாக இல்லினாய்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்ட நபர்களில் ஒருவர் வில் கவுண்டியில் உள்ள ஒரு வீட்டில் இனங்காணப்பட்டுள்ளார். ஜோலியட்டில் உள்ள இரண்டு வீடுகளில் மேலும் ஏழு பேர் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குற்றவாளியை கண்டுப்பிடிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





