நியூயார்க் நகரில் துப்பாக்கிச்சூடு : இளைஞருக்கு ஏற்பட்ட துயரம்!

நியூயோர்க், ரோசெஸ்டர் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 06 பேர் காயமடைந்துள்ளனர்.
நியூயார்க்கில் உள்ள ரோசெஸ்டரில் உள்ள மேப்பிள்வுட் பூங்காவில் துப்பாக்கிச்சூடு நடந்தது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவர் 20 வயதுடையவர் எனவும், காயமடைந்த ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை எனவும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
(Visited 26 times, 1 visits today)