கனடாவில் துப்பாக்கிச்சூடு: இந்திய பிரதமர் இரங்கல்!
கனடா பாடசாலைக்குள் நடத்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், மேற்படி சம்பவம் தொடர்பில் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
“கனடாவில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் அதிர்ச்சியடைந்தேன்.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த ஆழ்ந்த துக்க தருணத்தில் கனடா மக்களுடன் இந்தியா துணை நிற்கிறது.” என பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, ஆஸ்திரேலியா பிரதமர் உள்ளிட்ட உலக தலைவர்களும் கவலை வெளியிட்டுள்ளனர்.
கனடா நாட்டின் பாடசாலையில் நடந்த துப்பக்கி சூடு சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.




